Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Thipaan / 2017 செப்டெம்பர் 13 , மு.ப. 08:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேரின்பராஜா திபான்
தொழில்நுட்பத்துக்கும் மருத்துவத்துக்குமான தெற்காசிய நிறுவகத்தில் (சைட்டம்) மருத்துவப் பட்டம் பெறும் மாணவர்கள், இலங்கை மருத்துவ சபையில் பதிவு செய்யலாம் என, மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய கட்டளைக்கு எதிராக, இலங்கை மருத்துவ சபை, தாக்கல் செய்த மனு மீதான பரிசீலனைக்கு, உயர்நீதிமன்றம், திகதிகளைக் குறித்தது.
அந்த மனு, உயர்நீதிமன்ற நீதியரசர்களான புவனேஹ அலுவிஹார, பிரியந்த ஜயவர்தன, நளின் பெரேரா ஆகியோரடங்கிய குழாம் முன்னிலையில், நேற்று (12) எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதன்போதே, நீதியரசர்கள் குழாமால், பரீசீலனைக்கான தினங்களாக, செப்டெம்பர் 14, 15ஆம் திகதிகள் குறிக்கப்பட்டன.
தொழில்நுட்பத்துக்கும் மருத்துவத்துக்குமான தெற்காசிய நிறுவக மருத்துவ பட்டதாரிகளால், தாம், இல்கை மருத்துவசபையில் பதிவு செய்வதற்கு அனுமதின்னுமாறும் தமது பட்டம், வலிதானது என்று அறிவிக்குமாறும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
கடந்த ஜனவரி மாதம் 31ஆம் திகதி சைட்டத்தில் மருத்துவப் பட்டம் பெறும் மாணவர்கள், இலங்கை மருத்துவ சபையில் பதிவு செய்யலாம் என, மேன்முறையீட்டு நீதிமன்றத்தால், கட்டளையிடப்பட்டிருந்த நிலையில், அதற்கெதிராக, இலங்கை மருத்துவ சபை, உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது.
அதன்பின்னர் இடம்பெற்ற அமர்வுவின் போது, மனுவை எடுப்பதற்கு உயர்நீதிமன்றம் தீர்மானித்ததுடன், அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம், இலங்கை மருத்துவ சபை தாக்கல் செய்த மனுவில் இணைந்துகொள்ளவதற்கும் அனுமதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
12 minute ago
12 minute ago
16 minute ago