2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மருத்துவர் உட்பட மூவர் கொரோனாவுக்கு பலி

Freelancer   / 2021 ஓகஸ்ட் 28 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மருத்துவர் உட்பட மேலும் மூவர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர்.

தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் யாழ்ப்பாணம் கிளையில் மருத்துவச் சான்றிதழ் வழங்கும் மருத்துவர்களில் ஒருவரான நல்லூரைச் சேர்ந்த 72 வயதுடையவரே கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளார்.

மேலும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மானிப்பாயைச் சேர்ந்த 53 வயதுடைய பெண் ஒருவரும் உரும்பிராயைச் சேர்ந்த 56 வயதுடைய ஆண் ஒருவரும் உயிரிழந்தனர்.

இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட்-19 நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 227ஆக உயர்வடைந்துள்ளது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .