2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞர்

Editorial   / 2019 ஜனவரி 01 , பி.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞரொருவர் தொடர்பிலான விசாரணைகள்  முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கும்புருகமுவ பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த இளைஞர் 23 வயதுடையவரென்றும், இவர் அரச மரக்கூட்டுதாபனத்தின் உறுப்பினரொருவரென்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞர் நேற்று (31), அவர் தங்கியிருந்த வீட்டிலிருந்து வெளியில் சென்று, பின்னர் மீள வீடு திரும்பியுள்ளதாகவும், இன்று (01) காலை அவரது அறையில் பார்க்கும் பொழுது நிலத்தில் விழுந்து உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இளைஞரின் மரணம் தொடர்பிலான காரணங்கள் இதுவரை கண்டறியப்படாத நிலையில், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .