2025 மே 10, சனிக்கிழமை

மற்றுமொரு சீனக் கப்பல் நுழைவதை மறுத்தது இலங்கை

Freelancer   / 2023 டிசெம்பர் 19 , மு.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் கடல் எல்லைக்குள் ஆய்வுகளை மேற்கொள்ள முயன்ற சீன ஆய்வுக் கப்பலுக்கு இலங்கை தரப்பில் அனுமதி மறுத்துள்ளதாக மூத்த அரசாங்க அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகி உள்ளன.

மற்றொரு சீன அதிநவீன ஆராய்ச்சிக் கப்பல் Xiang Yang Hong 3, இலங்கை மற்றும் மாலைதீவு உள்ளிட்ட இந்தியப் பெருங்கடல் பகுதியில் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் மே வரை ஆய்வுகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த ஆய்வுக்கான அனுமதியை இலங்கை மற்றும் மாலைதீவுகளிடம் இருந்து சீனா முறைப்படி கோரியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், ஹிந்துஸ்தான் டைம்ஸின் சமீபத்திய அறிக்கையின்படி, 

சீன கப்பலின் திட்டமிடப்பட்ட நடவடிக்கைகளுக்கு இந்தியா தனது கடுமையான ஆட்சேபனையைப் பதிவுசெய்துள்ளது, இரு தீவு நாடுகளையும் சீன கப்பல் நுழைவதை தடுக்குமறு வலியுறுத்துகிறது.

Xiang Yang Hong 03 கப்பல் தற்போது தென் சீனக் கடலில் உள்ள Xiamen கடற்கரையில் இருப்பதாகவும், அனுமதியைப் பெற்ற பிறகு மலாக்கா வழியாக இந்த நாடுகளுக்குச் செல்லும் என்றும் அது தெரிவித்துள்ளது.

விஞ்ஞான ஆய்வு என்ற போர்வையில் உளவுத்துறையை சேகரிக்கும் இந்த ஆராய்ச்சி பணியை சீனா பயன்படுத்துவதாக இந்திய ஊடகங்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X