2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

மலசலகூடத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த தாய் மீட்பு

Gavitha   / 2015 டிசெம்பர் 03 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலசலகூடத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இருந்த 71 வயதுடைய தாயொருவரை, பொலிஸார் மீட்ட சம்பவம் மிடியாகல, திட்டெலிய பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இரண்டு பிள்ளைகளின் தாயான ரனசிங்ஹ ஆராச்சிகே கருணாவதி என்பவரே, இவ்வாறு மலசலகூடத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த முதியவரின் மூத்த மகள், வெளிநாட்டில் தொழில் புரிந்ததாகவும் இவர், அவருடைய மருமகன் மற்றும் பேத்திகளுடன் வசித்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் மூத்த மகளினாலேயே இவர் மலசலகூடத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.

மனநலம் பாதிக்கப்பட்டு, அலைந்து திரிந்துகொண்டிருப்பதாலேயே அவரை அவருடைய மகள் இவ்வாறு அடைத்து வைத்துள்ளார் என்று, குறித்த வீட்டுக்கு அருகில் வசிப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது, மீட்கப்பட்ட முதியவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X