2025 ஜூலை 07, திங்கட்கிழமை

மல்லியப்புச் சந்தியில் ஆர்ப்பாட்டம்

Editorial   / 2019 ஜனவரி 28 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 1,000 ரூபாய் சம்பள அதிகரிப்பு வேண்டுமென வலியுறுத்தியும், அடிப்படைச்சம்பளமாக 700 ரூபாவுக்கு இணக்கவேண்டாமெனக் கோரியும், கொழும்பு உள்ளிட்ட பல பாகங்கள் எதிர்ப்பு நடவடிக்கைள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ராஜகிரியவில், முதலாளிமார் சம்மேளத்துக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. அங்கு, பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதேவேளை, மலையகத்தில் பல தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், மல்லியப்பு சந்தியில் முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டத்தில், ​தொழிலாளர்கள் பலர் இணைந்துகொண்டு எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். இதனால், கொழும்பு-ஹட்டன் பிரதான வீதியிலும், ஹட்டன்-நுவரெலியா வீதியிலும் கடு​ம் வாகன நெரிசல்கள் ஏற்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .