2026 ஜனவரி 07, புதன்கிழமை

மிளகு, கோப்பி, ஏலக்காய் செய்கைகளுக்கு நிதியுதவி

Editorial   / 2026 ஜனவரி 06 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனர்த்தத்தால் சேதமடைந்துள்ள மிளகு, கோப்பி மற்றும் ஏலக்காய் செய்கைகளுக்கான உதவி வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் கூடிய அமைச்சரவையில் அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக   ஜனாதிபதி  சமர்ப்பித்துள்ள யோசனைக்கே அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

 

சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட திடீர் அனர்த்த நிலைமையால் சேதமடைந்துள்ள குறுங்காலப் பயிர்ச் செய்கையாளர்களுக்கு உதவி வழங்குவதற்குத் தேவையான ஆலோசனைகள் அடங்கிய சுற்றறிக்கை இலக்கம் 08/2025 மற்றும் 08/2025(1) இன் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

 

ஏற்றுமதி விவசாயத் துறையின் பொருளாதார முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, அனர்த்தத்தால் சேதமடைந்துள்ள நீண்டகால விவசாயப் பயிர்களை மீள் செய்கை செய்வதற்காக அப்பயிர்ச் செய்கைகளை மேற்கொண்டிருக்கின்ற செய்கையாளர்களுக்கு ஒரு ஹெக்ரெயாருக்கு உயர்ந்தபட்சம் 425,000/- ரூபாய் கொடுப்பனவை செலுத்துவதற்கும் அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

 

இதேவேளை,  புதிதாக நடுகை செய்வதற்கும் மற்றும் மீள்நடுகைக்கும் தேவையான நாற்றுக்கள், கன்றுகளை ஏற்றுமதி விவசாயத் திணைக்கள வேலைத்திட்டத்தின் மூலம் இலவசமாக வழங்குவதற்கும் அங்கீகாரம் வழங்கியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .