2025 மே 01, வியாழக்கிழமை

மழையால் நிரம்பி வழியும் நீர்த்தேக்கங்கள்

Freelancer   / 2021 நவம்பர் 08 , பி.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் நிலவும் கடும் மழையுடனான காலநிலை காரணமாக 23 பிரதான நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழியும் நிலையில் உள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்தது.

மேலும் 12 முக்கிய நீர்த்தேக்கங்கள் நிரம்பியதால் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் நீர்ப்பாசன பணிப்பாளர், நீர் முகாமைத்துவ பொறியியலாளர் டி அபேசிறிவர்தன தெரிவித்தார்.
 
எதிர்வரும் நாட்களில் மழை பெய்தால் உரிய நடவடிக்கை எடுப்பதற்கு தமது திணைக்களம் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, களுகங்கை மற்றும் குடா கங்கையை அண்மித்த பிரதேசங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான அபாயம் காணப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளது.

அதன்படி, பதுரலிய, புலத்சிங்கள, பலிந்தநுவர, மில்லனிய, ஹொரணை, களுத்துறை, தொடங்கொடை பிரதேச செயலாளர் பிரிவுகளில் வசிக்கும் மக்களை அவதானத்துடன் இருக்குமாறு எச்சரித்துள்ள திணைக்களம், குறிப்பிட்ட பிரதேசங்களிலுள்ள தாழ்நில வீதிகளைப் பயன்படுத்தும் சாரதிகள் அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்துமாறும் கோரியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .