2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

மாவட்ட அபிவிருத்திக்கு ரூ. 2,000 மில்லியன் ஒதுக்க அமைச்சரவை ஒப்புதல்

Simrith   / 2025 ஓகஸ்ட் 12 , பி.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய நாடு தழுவிய முயற்சியான மாவட்ட அபிவிருத்தித் திட்டத்தை செயல்படுத்த, 2025 தேசிய வரவு செலவுத் திட்டத்தில் இருந்து ரூ. 2,000 மில்லியன் ஒதுக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், உள்ளூர் உற்பத்தியை ஊக்குவித்தல், சேவை வழங்கலை மேம்படுத்துதல், வர்த்தகம் மற்றும் சந்தைப்படுத்தல் வசதிகளை விரிவுபடுத்துதல் மற்றும் நிறுவன திறன்களை வலுப்படுத்துதல் ஆகியவற்றை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் திணைக்களத்தால் அடையாளம் காணப்பட்ட வறுமை நிலைகளின் அடிப்படையில், பல பரிமாண வறுமை குறியீட்டைப் பயன்படுத்தி மாவட்டங்களுக்கு நிதி பகிர்ந்தளிக்கப்படும்.

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அவர்களால் இந்தப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது.

பிராந்திய ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்வதற்கும் மாவட்ட அளவில் பொருளாதார வளர்ச்சியை ஆதரிப்பதற்கும் இந்த முயற்சி நோக்கம் கொண்டதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .