Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kanagaraj / 2016 மே 04 , மு.ப. 01:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
அழகன் கனகராஜ்
'முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்டத்தின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த
ராஜபக்ஷவை நாங்கள் பாதுகாக்க வேண்டும். அவர் இல்லாவிடின் நாங்கள் எவ்வாறு ஆட்சிக்கு வந்திருப்பது?' என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அச்சுறுத்தல் இருக்கின்ற நிலையில், ஜோர்ஜ் புஷ்ஷுக்கே
பொலிஸ் பாதுகாப்புத்தான் வழங்கப்பட்டுள்ளது. டொனி பிளேயர் இங்கு வரும்போது, தனது பாதுகாப்புக்குப் பொலிஸாரையே அழைத்து வந்தார். இந்தியத் தலைவர்களுக்கும் பொலிஸ் பாதுகாப்பே வழங்கப்பட்டுள்ளன என்று சுட்டிக்காட்டிய பிரதமர், மஹிந்தவின் பாதுகாப்புக்கு வழங்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்iயைக அதிகரிக்க வேண்டுமாயின், அது தொடர்பில் கலந்துரையாடப்படலாம் என்றும் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றம், சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்றுச் செவ்வாய்;க்கிழமை பிற்பகல் 1 மணிக்கு கூடியது. அவையின் பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின்
எம்.பி.யான தினேஷ் குணவர்தன எழுந்தார். இதன்போது குறுக்கிட்ட சபாநாயகர், சபையின் நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் உங்களுக்கு சந்தர்ப்பம் தருகின்றேன் என்றார்.
எனினும், விடாபிடியாக நின்ற தினேஷ் குணவர்தன எம்.பி, இது முக்கியமான விடயம், இப்போதே இடமளிக்கவும் என்று கோரினார். அதன் பின்னரே சபாநாயகர், தினேஷ் எம்.பியை உரையாற்றுவதற்கு இடமளித்தார்.
இதன்போது உரையாற்றிய அவர், 'நாட்டில் 30 வருடகாலம் நிலவிய கொடூர பயங்கரவாதத்தை ஒழித்து, ஜனநாயக சுதந்திரத்தை நாட்டில் ஏற்படுத்திய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக் குறைக்கப்பட்டுள்ளது. அது பிரச்சினையாகும். முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருந்த பயிற்சிபெற்ற இராணுவப் படையணி வாபஸ் பெற்றமை பிரச்சினையாகும். அரசாங்கம் எடுத்திருக்கும் மிக அபத்தமான இந்தத் தீர்மானத்தை மறுபரிசீலனை செய்வீர்களா?' என்று வினவினார்.
இதற்குப் பதிலளிக்கும் போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago