2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஒரு இலட்சம் ரூபாய் சம்பளம்

Kogilavani   / 2015 டிசெம்பர் 03 , மு.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ, மாதாந்தம் இரண்டு கொடுப்பனவுகளை பெறுகின்றார் என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க அறிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் என்றவகையில் அவர், மாதாந்த சம்பளம் மற்றும் கொடுப்பனவு அடங்களாக ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவை மாதமொன்றுக்கு பெறுகின்றார்.

முன்னாள் ஜனாதிபதிக்கான ஓய்வூதிய கொடுப்பனவு உள்ளிட்ட இதர கொடுப்பனவாக கடந்த ஓகஸ்ட் மாதம் முதல் ஒவ்வொரு மாதமும் அவர் 3 இலட்சத்து 49ஆயிரம் ரூபாயை பெறுகின்றார் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X