2025 மே 21, புதன்கிழமை

மஹிந்தவின் செயலாளருக்கு பிணை

Kogilavani   / 2015 டிசெம்பர் 09 , மு.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பாரூக் தாஜுதீன்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இணைப்புச் செயலாளரான சம்பக் கருணாரத்னவுக்கு, கோட்டை நீதவான் நீதிமன்ற நீதவான் பிரியந்த லியனகேயால் பிணை வழங்கப்பட்டுள்ளது.

அரசாங்கத் திணைக்களங்கள் பலவற்றிலிருந்து, மோசடியாக ஊதியங்களைப் பெற்றதாகவும், பொய்யான ஆவணங்களைப் பயன்படுத்தி வெளிநாட்டுக்குச் சென்றதாகவும் குற்றஞ்சாட்டியே, இவர் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

சந்தேகநபரின் கடவுச்சீட்டு முடக்கப்பட்டுள்ளதுடன், 25,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், 2 மில்லியன் ரூபாய் பெறுமதியிலான இரண்டு சரீரப் பிணையிலும் செல்ல, அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது.

குறித்த சந்தேகநபரைத் தடுத்துவைக்கத் தேவையான போதுமான ஆதாரங்களைச் சமர்ப்பிக்கத் தவறியதன் காரணமாக, அவரைப் பிணையில் செல்ல நீதவான் அனுமதித்தார்.

இவ்வழக்கு, மார்ச் 14ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .