2025 ஜூலை 05, சனிக்கிழமை

மஹிந்த பதவி விலகுவதாக அறிவிப்பு

Editorial   / 2018 டிசெம்பர் 15 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அண்மையில் பிரதமர் பதவியில் அமர்த்தப்பட்ட மஹிந்த ராஜபக்‌ஷ, அப்பதவியில் இருந்து இன்று (15) விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை இன்று நிகழ்த்திவிட்டு, அவர் தனது பிரதமர் பதவியில் இருந்து விலகுவார் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ரஜபக்‌ஷ, தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.  

இதேவேளை, பிரதமர் பதவியில் மஹிந்த இருக்கும் வரை வேறொரு பிரதமரை ஜனாதிபதியால் நியமிக்க முடியாது போகும் என்பதாலேயே, மஹிந்த ராஜபக்‌ஷ, இந்தத் தீர்மானத்துக்கு வந்துள்ளாரென, நாடாளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .