Kogilavani / 2017 ஜூலை 12 , மு.ப. 09:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேரின்பராஜா திபான்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு அதிகாரியாகவும் சாரதியாகவும் கடமையாற்றிய கப்டன் திஸ்ஸ விமலசேன மற்றும் புத்தளம் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் லால் பிரியந்த பீரிஸ் ஆகிய இருவரினதும் விளக்கமறியலை எதிர்வரும் 18ஆம் திகதிவரை நீடித்து, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம், நேற்று (11) உத்தரவிட்டது.
அரச காணியொன்றில் கற்குவாரி நடத்தி, அரசுக்கு 29 மில்லியன் ரூபாய் நட்டத்தை ஏற்படுத்தினர் என்ற குற்றச்சாட்டில், நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட இருவரும், நேற்று (11) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இந்த வழக்கு, மேலதிக நீதவான் சானிமா விஜேபண்டார முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, முதலாவது சந்தேகநபரான திஸ்ஸ விமலசேனவின் பிணைக் கோரிக்கையில் சிறப்புக் காரணங்களை எவையும் இல்லாததால் பிணைக் கோரிக்கையை நிராகரிப்பதாக நீதவான் அறிவித்தார்.
அத்துடன், நீதவான் முன்னிலையில் வாக்குமூலமொன்றை தான் வழங்க விரும்புவதாக இரண்டாவது சந்தேகநபர் கேட்டுக்கொண்டார்.
அந்தக் கோரிக்கை தொடர்பில் அடுத்த அமர்வில் அறிவிக்கப்படும் என உத்தரவிட்ட நீதவான், இருவரினதும் விளக்கமறியலை, 18ஆம் திகதிவரை நீடித்து உத்தரவிட்டார்.
33 minute ago
4 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
4 hours ago
8 hours ago
9 hours ago