2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

‘மஹிந்தவின் பாதுகாப்பை நீக்க வேண்டும் ’

Editorial   / 2018 டிசெம்பர் 04 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமைச்சரவை கலைக்கப்பட்டுள்ளதாக அறிவித்து மேன்முறையீ்ட்டு நீமன்றத்தால் வழங்கப்பட்டுள்ள இடைக்கால தடையுத்தரவின் பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

இன்று அலரிமாளிகையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டப் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மஹிந்த முன்னாள் ஜனாதிபதி என்பதால் அவருடைய பாதுகாப்பை முற்றாக நீக்குமாறு கோரவில்லை என்ற போதிலும் அவர் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் வழங்கப்பட்டுள்ள மேலதிக பாதுகாப்பை நீக்குமாறே கோரிக்கை விடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி புதிய பிரதமர் நியமிக்கப்பட்டதன் பின்னர் பொலிஸ்மா அதிபரால் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களின் பாதுகாப்பு நீக்கப்பட்டதைப் போன்று உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ்மா அதிபரால் புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பும் நீக்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார வேண்டுகோள் விடுத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .