2025 ஜூலை 07, திங்கட்கிழமை

’மஹிந்தவுக்கு அதிகாரமோக நோய்’

Editorial   / 2018 நவம்பர் 30 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால், பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு, அதிகார மோக நோய் ஏற்பட்டுள்ளதென்று,  ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

அத்துடன், ஐக்கிய தேசிய முன்னணியினர், தேர்தலுக்கு ஒருபோதும் அஞ்சப்போவதுமில்லை என, அவர் கூறினார்.

நாடாளுமன்றம், சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில், இன்று முற்பகல் 10.30க்கு கூடியது. இதன்போது, சபாநாயகளின் விசேட அறிவிப்புக்குப் பின்னர், ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்கவினால், மைத்திரி - மஹிந்த அரசாங்கத்துக்கு எதிரான பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டது.

பொதுமக்களின் பணத்தைக் கொண்டு, அமைச்சரவை, இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் மற்றும் அவர்களது விடயதானங்களுக்காக, எந்தவொரு நிதியும் ஒதுக்கீடு செய்யக்கூடாதென்றும் அதற்கு, அமைச்சுகளின் செயலாளர்களுக்கு எவ்வித அதிகாரங்களும் இல்லையென்றும் கூறியே, இந்தப் பிரேரணை முன்வைக்கப்பட்டது.

இந்தப் பிரேரணையை முன்வைத்து உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .