2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

மாகாண கட்டுப்பாடுகளை மீறினால் என்ன நடக்கும்?

Freelancer   / 2021 ஓகஸ்ட் 14 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாகாணங்களுக்கு இடையில் விதிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மாகாணங்களுக்கு இடையில் பயணிப்போர் குறித்து ஆராய்வதற்காக இன்று (14) முதல் விசேட பாதுகாப்பு திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இவ்வாறு, அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாட்டை மீறி, மாகாண எல்லைகளை கடக்க முயற்சிப்போரை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

சுற்றுலா, சுகாதாரம், விமான நிலையங்கள், துறைமுகங்கள், ஆடை மற்றும் விவசாயம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோரை தவிர்த்து மாகாணங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்து சேவைகள் நேற்று நள்ளிரவு முதல் நிறுத்தப்பட்டுள்ளன.

அனுமதியுள்ளவர்கள் மாகாண எல்லைகளில் உள்ள வெளியேறும் மற்றும் நுழைவிடங்களில் சிறப்பு பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் கூறினார். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X