2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

மாங்காய் பறித்த நால்வர் கைது

Editorial   / 2023 பெப்ரவரி 28 , பி.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

சூரியவெவ முதுநாகல பிரதேசத்திலுள்ள விவசாயத் தோட்டத்தில், 20 ஏக்கரில் மாங்காய் மரங்கள் நாட்டப்பட்டுள்ளன. அந்த தோட்டத்துக்குள் சட்டவிரோதமான முறையில் உள்நுழைந்து சுமார் 7 இலட்சம் ரூபாய் பெறுமதியான மாங்காய்கள் பறிக்கப்பட்டுள்ளன.

அந்த சம்பவத்துடன் தொடர்புடைய நால்வரை சந்​தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திங்கட்கிழமை (27) மாலை 6 மணியளவில் வானொன்றில் வந்த இந்த நபர்கள், தோட்டத்துக்குள் நுழைந்து மாங்காய்களை பறித்துள்ளனர்.

இதுதொடர்பில் தோட்டத்தின் உரிமையாளருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பிரதேசவாசிகளுடன் தோட்டத்துக்குச் சென்று அந்த நால்வரையும் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சந்தேகநபர்கள் சூரியவெவ மற்றும் ஹொரனை ஆகிய பிரதேசங்களை வசிப்பிடமாகக் கொண்டவர்கள் என்று தெரிவித்த சூரியவெவ பொலிஸார், அந்த நால்வரில் ஒருவர் 14 வயதான மாணவன் என்றும் தெரிவித்தனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X