Editorial / 2025 நவம்பர் 11 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் உயர்தரப் பரீட்சை எழுதும் பம்பலப்பிட்டி மகளிர் கல்லூரியின் மாணவி ஒருவர், பரீட்சை மத்திய நிலையமான கல்லூரியின் மூன்று மாடி கட்டிடத்திலிருந்து செவ்வாய்க்கிழமை (11) பிற்பகல் விழுந்து பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்தில் அவரது இரண்டு கால்களிலும் காயம் ஏற்பட்டதால், அவர் உயிர் பிழைத்தது ஒரு அதிசயம் என்று நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
மாணவி இந்த ஆண்டு இரண்டாவது முறையாக உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவது தெரியவந்துள்ளது.
உயிரியல் வினாத்தாள் வழங்கப்படுவதற்கு சுமார் பதினைந்து நிமிடங்களுக்கு முன்பு இந்த விபத்து நிகழ்ந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காபர்ட் செய்யப்பட்ட பகுதியிலேயே அந்த மாணவி, மாடியில் இருந்து விழுந்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
படுகாயமடைந்த 19 வயது மாணவி மொரட்டுவையைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
7 hours ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
9 hours ago