2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

மாணவன் அடித்துக் கொலை;11 பேர் நீதிமன்றில் ஆஜர்

Simrith   / 2025 ஏப்ரல் 24 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலகெதர பொலிஸ் பிரிவில் சக பாடசாலை மாணவனின் மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பதினொரு இளைஞர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர், சில வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சிறார் தடுப்பு மையங்களுக்கு அனுப்பப்பட்டதுடன், மேலும் இருவர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஏப்ரல் 16 ஆம் திகதி தனிப்பட்ட தகராறு காரணமாக சக பாடசாலை மாணவனை இளைஞர்கள் குழு ஒன்று உடல் ரீதியாக தாக்கியது. பலத்த காயமடைந்த சிறுவன் குருநாகல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஏப்ரல் 22 ஆம் திகதி உயிரிழந்தார்.

தாக்குதல் நடந்த நாளில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 18 வயதுக்குட்பட்டவர்கள் என்பதால், சிறார் தடுப்பு மையங்களுக்கு அனுப்பப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மீதமுள்ள எட்டு சந்தேக நபர்களும் நேற்று பிலேஸ்ச நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர், அதன் பின் இரண்டு சந்தேக நபர்கள் ஏப்ரல் 29 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். 

மீதமுள்ள ஆறு சந்தேக நபர்கள் வயது குறைந்தவர்கள் என்பதால், அவர்களை சிறார் தடுப்பு மையங்களுக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது. 

எட்டு சந்தேக நபர்களும் ஏப்ரல் 29 ஆம் திகதி அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட உள்ளனர். மாவத்கம பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X