Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 13 , மு.ப. 11:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
எங்களது தாய்நாட்டை அமைதியுடனும் செழிப்புடனும் ஓர் அழகான எதிர்காலத்துக்கு, ஒரு விலைமதிப்பற்ற புத்தமாக மாற்றுவதற்கு மாணவர் சமூகம் முன்வரவேண்டுமென, கல்வி விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழகப்பெரும கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இந்த புத்தாண்டின்போது, நான் உங்கள் தந்தையாக உன்னதமான நேரத்திற்கு ஏற்ப விடுக்கும் அழைப்பானது, இலங்கை மண்ணின் அனைத்து பள்ளிக் குழந்தைகளும் ஒரு புதையல் மதிப்புள்ள புத்தகத்தை எழுத வேண்டும் என்பதாகும்.
இன்று (13) இரவு 10.43 மணிக்கு மலரும் புத்தாண்டின்போது, எங்கள் தாய்நாட்டை அமைதியுடனும், செழிப்புடனும்; ஓர் அழகான எதிர்காலத்துக்கு விலைமதிப்பற்ற புத்தகமாக மாற்றுவதற்கு, உங்கள் விலை மதிப்பற்ற கதையை, உங்கள் பேனா அல்லது பென்சிலை பிடித்து எமுத ஆரம்பித்துக்கொள்ளுங்கள்.
உங்கள் தாய்நாடு உற்சாகத்துடன், அழகான மற்றும் ஆரோக்கியமான எதிர்காலத்துக்காக அயராது உழைக்கும் இத்தருணத்தில், வாய்ப்பை இழக்காதீர்கள். நாளை பூக்கும் பத்தாயிரம் மாணவ புத்தகங்களுடன் முழு நாட்டுக்கும் அதன் நறுமணத்தை பரப்புங்கள். உங்கள் அழகான செய்தியை உலகம் முழுவதும் கொடுப்போம்.
'விட்டு விடாதீர்கள்.... அதை விடாமல் பிடிப்போம்' இந்த படைப்புத் திட்டத்துடன் புத்தாண்டுக்கான வேலையை தொடங்குவோம் என, அமைச்சர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago