2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

‘மாணவர்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காண முயற்சிப்போம்’

Editorial   / 2019 ஜனவரி 02 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

"உயர்கல்வி துறையில் மாணவர்களின் மோதல்கள் மற்றும் எதிப்பு பேரணிகள் என்பன இடம்பெறுகின்றன. அவர்களது கோரிக்கைகளை இவ்வாறான வழியில்தான் வெளிப்படுத்துகின்றனர். இருந்தபோதிலும், அவர்களுடன் கலந்துரையாடி, அவர்களது  கோரிக்கைகளுக்கு செவிமடுத்து அவர்களது பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு நாங்கள் முயற்சிப்போம். அந்த விஷயத்தில் சம்பந்தப்படுபவர்கள் பொறுமை கடைப்பிடிப்பதும் அவசியமாகும்" என, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

"அத்துடன், இந்த மாணவர்களின் மோதலுக்கு மத்தியில் தங்களது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வதற்கு எத்தனிக்கும் சந்தர்ப்பவாத அரசியல் சக்திகள் பற்றியும் நாங்கள் அறியாமலில்லை" என்றும் அவர் கூறினார்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கேட்போர் கூடத்தில் நேற்று (01) நடைபெற்ற 2019ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வுக்குத் தலைமை வகித்து உரையாற்றிய போதே, அமைச்சர் இவற்றைக் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .