2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

மாணவர்களை சோதனையிடுவதை கண்டிக்கிறோம்

Nirosh   / 2022 டிசெம்பர் 19 , பி.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

போதைப்பொருள் வர்த்தகர்களைக் கைது செய்யாது அப்பாவி பாடசாலை மாணவர்களை சோதனை செய்து அவர்களை சிரமத்துக்குள் தள்ளும் பொலிஸாரின் செயற்பாடுகளை வன்மையாகக் கண்டிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜெ.சி.அலவதுவல தெரிவித்தார்.
 
பாடசாலை மாணவர்களை பொலிஸார் சோதனை செய்யும் நிலைக்கு நாடு வந்துள்ளது. பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்களே மாணவர்களை சோதனை செய்ய வேண்டும்.  இதுபோன்ற நிலைமை உலகில் வேறெங்கும் நடக்குமா? எனவும் கேள்வி எழுப்பினார்.
 
மாணவர்களை சோதனையிடும் பொறுப்பை பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வழங்கிவிட்டு போதைப்போருள் வர்த்தகத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X