Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Editorial / 2019 ஜனவரி 28 , மு.ப. 04:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.குகன்
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகப் பிரிவில், கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ள 225.31 ஏக்கர் காணி, இம்மாத இறுதியில் விடுவிக்கப்படுமெனத் தெரிவித்த பிரதேச செயலாளர் ப.ஜெயராணி, அக்காணிகளுக்கு தற்போது பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டு வருகின்றது என்றும் தெரிவித்தார்.
வேம்பொடுகேணியில் ஏ- 9 வீதியிலிருந்து தெற்கு நோக்கி வரையுள்ள 200 மீற்றர் பகுதி ஏற்கெனவே விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அடுத்துள்ள மேலும் 300 மீற்றர் வரையான பகுதி விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதாவது, முகமாலையில் ஏ- 9 வீதிக்கு சமனான வடக்கு நோக்கி வரையுள்ள பகுதி விடுவிக்கப்படவுள்ளதாகத் தெரிவித்த அவர், இத்தாவிலில் சந்தியிலிருந்து முருகையன் கோவிலிலுக்குச் செல்லும் வீதிக்கு மேற்கு பக்கமாக ஏற்கெனவே விடுவிக்கப்பட்ட ஏ- 9 வீதியிலிருந்து 200 மீற்றர் பகுதியைத் தொடர்ந்து, உயர் மின்வலு வலையமைப்பு வரையான மேலும் 887 மீற்றர் வரையான பகுதி விடுவிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
ஆதலால், மேற்கூறப்பட்ட இடங்களுக்குரியவர்கள் மீள்குடியேற்றச் செயற்பாடுகளை இலகுபடுத்தும் பொருட்டு, மீள்குடியேற்றம் தொடர்பான பதிவுகளை, எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தில் மேற்கொள்ளுமாறு, அவர் கேட்டுக்கொண்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
7 hours ago