2025 மே 09, வெள்ளிக்கிழமை

மாயமான சின்ன பிக்குனிகள் சிக்கினர்

Editorial   / 2023 ஓகஸ்ட் 27 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 மினுவாங்கொடை பொரலுவத்தை பகுதியில் உள்ள மெஹனி மடாலயத்தில் இருந்து காணாமல் போன மூன்று சிறிய பிக்குனிகளை  நுவரெலியா பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

மெஹேனி மடத்தில் தங்கியிருந்த (32) வயதுடைய பெண் ஒருவருடன் 12, 15 மற்றும் 18 வயதுடைய இந்த மூன்று பிக்குனிகள்  கடந்த (24) முதல் காணாமல் போயுள்ளதாக மினுவாங்கொடை பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. .

சந்தேகத்திற்குரிய பெண் நுவரெலியாவைச் சேர்ந்தவர். மூன்று பிக்குனிகளையும்  நுவரெலியாவிலுள்ள அவரது உறவினர் வீட்டிற்கு சனிக்கிழமை  (26) அழைத்துச் சென்ற போது, ​​மூன்று பிக்குனிகளும்  பெண்ணும் நுவரெலியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

  மெஹனி மடாலயத்தில் முதல்வர் பிரச்சினையால், பெண்ணுடன் வந்ததாக கூறப்படுகிறது. சந்தேகத்திற்குரிய பெண் உள்ளிட்டோர் மேலதிக விசாரணைகளுக்காக மினுவாங்கொடை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X