2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

மார்ச் 5இல் பாதீடு?

Editorial   / 2019 ஜனவரி 03 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

கெலும் பண்டார

நாட்டின் வருடாந்தப் பாதீட்டை, இவ்வாண்டு மார்ச் 5ஆம் திகதி சமர்ப்பிப்பதற்கு, அமைச்சரவை நேற்று (02) தீர்மானித்தது என அறியமுடிகிறது. நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போதே, இம்முடிவு எடுக்கப்பட்டதெனத் தெரிவிக்கிறது.

இவ்வாறு பாதீடு சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னதாக, ஒவ்வோர் அமைச்சுக்குமான நிதி ஒதுக்கீடுகள் குறித்த, நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை, இம்மாதம் 7ஆம் திகதி, அரசாங்கம் சமர்ப்பிக்கவுள்ளது. அரசாங்கத் தரப்புத் தகவல்களின் அடிப்படையில், பொதுச் செலவுக்காக, இவ்வாண்டு அதிகமாக நிதி ஒதுக்கப்படுமெனத் தெரிகிறது.

இதேவேளை, நாட்டின் அரச வங்கிகளை, அரச தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்லவின் கீழ் ஒதுக்குவதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சம்மதித்துள்ளார் என அறியமுடிகிறது.

அமைச்சர்களுக்கான விடயதானங்களை ஒதுக்கும் போது, இதுவரை காலமும் லக்‌ஷ்மன் கிரியெல்லவின் கீழ் காணப்பட்ட அரச வங்கிகளை, நிதியமைச்சர் மங்கள சமரவீரவின் கீழ், வர்த்தமானி மூலமாக, ஜனாதிபதி ஒதுக்கியிருந்தார். ஆனால், இந்நடவடிக்கையை எதிர்த்த அமைச்சர் கிரியெல்ல, ஜனாதிபதியின் பழிவாங்கும் நடவடிக்கை என இதை வர்ணித்திருந்தார்.

ஆனால், நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி சிறிசேன, இவ்விடயத்தில் எவரையும் பழிவாங்க நினைத்திருக்கவில்லை என்று குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .