2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

மார்ச் மாதத்தில் பணச்சுருக்கம் பதிவு

S.Sekar   / 2025 ஏப்ரல் 01 , மு.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

2025 மார்ச் மாதத்தில் நாட்டின் பணச்சுருக்கம் 2.6 சதவீதமாக பதிவாகியிருந்ததாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெப்ரவரி மாதத்தில் காணப்பட்ட 4.2 சதவீத பணச்சுருக்கத்துடன் ஒப்பிடுகையில் மார்ச் மாதத்தில் இந்த நிலை சற்று முன்னேறியிருந்ததாக குறிப்பிட்டுள்ளது.

உணவில்லா பணச்சுருக்கம் 2025 பெப்ரவரி மாதத்தில் பதிவாகியிருந்த 6.1 சதவீதம் என்பதிலிருந்து மார்ச் மாதத்தில் 4.1 சதவீதமாக வீழ்ச்சியடைந்திருந்தது. உணவு வகைகளுக்கான பணச்சுருக்கம் 2025 பெப்ரவரி மாதத்தில் 0.2 சதவீதமாக காணப்பட்ட நிலையில், மார்ச் மாதத்தில் 0.6 சதவீத பணவீக்கமாக உயர்ந்திருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .