2025 மே 03, சனிக்கிழமை

மாலக சில்வாவை கைதுசெய்ய உத்தரவு

ஆர்.மகேஸ்வரி   / 2018 ஜனவரி 18 , பி.ப. 02:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகனான மாலக சில்வாவை கைதுசெய்யுமாறு கொழும்பு சிரேஸ்ட நீதவான் தர்சிகா விமலசிறி இன்று (18) உத்தரவிட்டுள்ளார்.

2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கொழும்பிலுள்ள இரவு நேர களியாட்ட விடுதி ஒன்றில் பிரித்தானிய நாட்டவர் ஒருவருடன், மாலக சில்வா மோதல் சம்பவத்தில் ஈடுபட்டமைத்  தொடர்பான வழக்கில் உரியமுறையில் நீதிமன்றில் ஆஜராகாமைக் காரணமாகவே மாலக சில்வாவை கைதுசெய்ய பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு மீண்டும் மார்ச் மாதம் 6ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X