2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

மிதக்கும் வர்த்தக சந்தையை மறுசீரமைக்க பிரதமர் உத்தரவு

Editorial   / 2019 டிசெம்பர் 19 , பி.ப. 01:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

புறக்கோட்டையில் அமைந்துள்ள மிதக்கும் சந்தைத் தொகுதியை விரைவில் மறுசீரமைக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.

103 கடைத்தொகுதிகளைக்கொண்ட குறித்த மிதக்கும் சந்தை, 312 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டிருந்தது.

பராமரிப்பு இன்றி சந்தை் தொகுதி காணப்பட்ட நிலையில், நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்தப் பணிப்புரையை விடுத்துள்ளார்.

சந்தையின் பராமரிப்பு நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், மெருகூட்டல் மற்றும் பொதுமக்களுக்குத் தேவையான விடயங்களை நிவர்த்திக்கும் வகையில்மறுசீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .