2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

”மின் கட்டணத்தை அதிகரித்தால் வீதிக்கு இறங்குவோம்”

Editorial   / 2025 ஒக்டோபர் 12 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கம் எந்த வகையிலும் மின் கட்டணத்தை அதிகரித்தால், மக்களுடன் இணைந்து வீதியில் இறங்கி அதற்கு எதிராக கடுமையாகப் போராடுவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

மின் கட்டணத்தை அதிகரிக்காமல் இருக்க வேண்டும் என்று தான் நம்புவதாகவும் அவர் கூறினார்.

2.25 மில்லியன் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க மக்கள் முன்வர வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கேட்டுக்கொண்டார்.

சமகி ஜன பலவேகய பிரதான கட்சி அலுவலகத்தில்   டி.எஸ். சேனநாயக்க அரசியல் கல்வி மற்றும் நிலையான வளர்ச்சி பீடத்தின் திறப்பு விழாவில் அவர் இந்தக் கோரிக்கையை விடுத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X