2025 ஜூலை 16, புதன்கிழமை

மின் பொறி வைத்து யானையை கொலை செய்த நபர் கைது

Editorial   / 2018 ஒக்டோபர் 02 , பி.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

மின் பொறி வைத்து யா​னையொன்றை​ ​கொலை செய்த​ நபரொருவரை பொலிஸார் இன்று (02) பிற்பகல் கைது செய்துள்ளனர்.

ஹபரன – புவக்பிட்டிய பிரதேசத்தில் வைத்து, மின் பொறியினால் தாக்கப்பட்டு உயிரிழந்த குறித்த யானையினது உடலம் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து பொலிஸாரினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த சம்பவம் தொடர்பில் புவக்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்த குறித்த யானையானது, 7 அடி உயரமும், 15 வயதானதெனப் பொலிஸார் தெரிவித்ததோடு, குறித்த யா​னையினது உடலத்துக்கான பிரேத பரிசோதனை இன்று இடம்பெறுவதாகவும் தெரிவித்தனர்.

மேலும் குறித்த சந்தேகநபரின் வீட்டை சோ​தனையிட்ட வேளையில், குறித்த நபர் சட்டவிரோதமாக மின்சாரத்தை உப​யோகித்து பயன்படுத்தி வந்துள்ளமையும் தெரியவந்துள்ளது. குறித்த சந்தேகநபரை கைது செய்த பொலிஸார், இன்று (02)  கெக்கிராவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதாகத் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X