Editorial / 2019 ஓகஸ்ட் 21 , பி.ப. 12:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் வைத்து மின்சார தாக்குதலுக்கு உள்ளாகிய பக்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று புதன்கிழமை காலை இந்த சம்பவம் இடம்பெற்றதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று காலையில் அங்கு பெய்த மழை காரணமாக, வெளிவீதியில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமொரா பொறிமுறையில் மின் கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதில் சிக்கிய சுமார் 65 வயது மதிக்கத்தக்க நபர், சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
36 minute ago
39 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
39 minute ago
57 minute ago
1 hours ago