2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

மியன்மருக்கு செல்லும் இலங்கை மருத்துவக் குழு

S.Renuka   / 2025 ஏப்ரல் 01 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

மியன்மாரில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவி வழங்குவதற்காக இலங்கை மருத்துவக்குழு ஒன்றை மியன்மருக்கு அனுப்பத் தயாராக இருப்பதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

மியன்மார் அரசாங்கம் தேவையான அனுமதியை வழங்கியவுடன், அனர்த்த மீட்புப் பணிகளில் அனுபவமுள்ள விசேட மருத்துவர்கள் மற்றும்  தாதியர்கள் உள்ளடங்கிய மருத்துவ நிபுணர்கள் குழு ஒன்று தயாராக இருப்பதாக சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மியன்மாருக்கு அத்தியாவசிய மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் தேவையான பொருட்களை வழங்க அரசாங்கம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

மேலதிகமாக  களத்தில் உதவி வழங்க விசேட மருத்துவக் குழு ஒன்றை  நாங்கள் நியமித்துள்ளோம் எனவும் சுகாதார அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .