2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

மிலேனியம் சவால் ஒப்பந்தம் தற்காலிகமாக இடைநிறுத்தம்

Editorial   / 2019 டிசெம்பர் 19 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவுடனான மிலேனியம் சவால் ஒப்பந்தத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அத்துடன், குறித்த ஒப்பந்தம் தொடர்பில்  ஆராய்வதற்காக நான்கு பேர் கொண்ட குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (19) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவை இணைப்பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

கலாநிதி லலிதசிறி குணருவன் (தலைவர்), டீ.எஸ்.ஜயவீர,  நிஹால் ஜயவர்தன மற்றும் நாலக ஜயவீர ஆகியோர் குறித்த குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .