J.A. George / 2021 ஜனவரி 08 , பி.ப. 05:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈ.டி.ஐ. நிறுவனத்தில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் அந்த நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குற்றப் புலனாய்வு பிரிவினரால் அவர்கள் இன்று(08) மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜீவக்க எதிரிசிங்க, அசங்க எதிரிசிங்க, தீபா எதிரிசிங்க மற்றும் நாலக்க எதிரிசிங்க ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்ட மா அதிபர் வழங்கிய உத்தரவிற்கு அமையவே குறித்த நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
சுவர்ணமஹால் நிறுவனத்தில் இடம்பெற்ற நிதிமோசடி தொடர்பில் இவர்கள் இந்த வார ஆரம்பத்தில் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.
எனினும், ஈ.டி.ஐ. நிறுவனத்தில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கூறியுள்ளார்.
சந்தேக நபர்கள் நால்வரையும் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago