2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

‘ மீண்டும் யுத்தத்துக்கு இடமளிக்கப்படாது’

Editorial   / 2018 டிசெம்பர் 05 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

மீண்டும் யுத்தமோ தீவிரவாதமோ நாட்டுக்குள் உருவாக இடமளிக்கப்படாது’ எனக் குறிப்பிட்டு, முல்லைத்தீவின் பல பகுதிகளிலும் இன்று அதிகாலை சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

முல்லைத்தீவு நகரின் பல இடங்களிலும் முள்ளியவளைப் பிரதேசத்திலும் மக்கள் அதிகமாக வந்து செல்லும் பொது இடங்களில் குறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

நாட்டில் மீண்டும் யுத்தம் ஒன்றறை ஏற்படுத்த முயற்சிக்கும் நபர்களுக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்று திரள வேண்டும். 30 வருட யுத்தத்தின் வலியை நன்கு அறிந்தவர்கள் நாம் எனவும் குறிப்பிட்டு, யுத்தத்துக்கு எதிரான முல்லைத்தீவு மாவட்ட இளையோர் அமைப்பு என  பெயர் குறிப்பிடப்பட்டு குறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .