Thipaan / 2017 செப்டெம்பர் 28 , மு.ப. 03:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
மீதொட்டமுல்லை குப்பைகொட்டுமிடத்துக்கு எதிராக, அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் எழுவரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை, 2018ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14ஆம் திகதிக்கு, உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.
இந்த மனு, உயர்நீதிமன்ற நீதியரசர்களான புவனே அலுவிஹார, சிசிர டி அப்றூ, அனில் குணரத்ன ஆகியோரடங்கிய குழாம் முன்னிலையில், நேற்று (27) எடுத்துக்கொ ள்ளப்பட்டபோதே, ஒத்திவைக்க ப்பட்டது.
குப்பை கொட்டுமிடம் விரிவாக்கப்பட்டமையால் தமது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக, மனுவில் குறிப்பிட்டுள்ள மனுதாரர்கள், இதனால் தாம் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
சன அடர்த்தி மிகுந்த கொலன்னாவை நகரத்திலுள்ள இப்பிரதேசத்தில், நாளாந்தம், 700 - 1200 மெற்றிக்தொன் குப்பைகள் கொட்டப்படுவதாகவும், கொட்டப்படும் குப்பைகள் 18 ஏக்கர் வரை விஸ்தீரணமாகி, மலையாகியுள்ளது என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த குப்பைகளால், கிருமித் தொற்றுகள், டெங்கு, எலிக்காய்ச்சல், தோல் நோய்கள், சிறுநீரக நோய்கள் போன்றவை ஏற்பட்டு, இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவில், கொழும்பு மாநகர சபை, நகர அபிவிருத்தி அதிகார சபை, மேல் மாகாண கழிவு முகாமைத்துவ அதிகாரசபை, மத்திய சுற்றாடல் அதிகாரசபை, கொலன்னாவை நகரசபை மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர், பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இந்த மனுவின் கடந்த அமர்வின் போது, மீதொட்டமுல்லை கழிவு கொட்டுமிடத்தில், குப்பைகொட்டுவதைத் தவிர்க்கவுள்ளதாக, கொழும்பு மாநகர சபையினர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
43 minute ago
5 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
5 hours ago
9 hours ago
9 hours ago