Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2022 பெப்ரவரி 10 , பி.ப. 07:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
தலைமன்னார் பியர் இறங்கு துறையில் இன்றைய தினம் நடைபெறவிருந்த (10) இந்திய மீனவர்களின் படகுகள் ஏல விற்பனை இடைநிறுத்தப்பட்டதையடுத்து கொள்வனவாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர்.
இந்த ஏல விற்பனையில் கலந்து கொண்டு படகுகளை கொள்வனவு செய்ய மன்னார், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு உள்ளடங்களாக நாட்டின் பல பாகங்களில் இருந்தும் சுமார் 30 இற்கும் மேற்பட்ட கொள்வனவாளர்கள் தலைமன்னார் பியர் இறங்கு துறை பகுதிக்கு வருகை தந்திருந்தனர்.
எனினும் அறிவிக்கப்பட்டது போன்று ஏல விற்பனை இடம் பெறவில்லை என வருகை தந்த கொள்வனவாளர்கள் தெரிவித்தனர்.
இன்று காலை முதல் மதியம் வரை ஏல விற்பனைக்காக காத்திருந்த போதும் இறுதி நேரத்திலேயே குறித்த ஏல விற்பனை இடம் பெறாது என ஏற்பாட்டாளர்களினால் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தூர இடங்களில் இருந்து வருகை தந்த கொள்வனவாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
24 May 2025
24 May 2025