2025 ஜூலை 10, வியாழக்கிழமை

மு.கா - தேசிய சூறா கவுன்ஸில் சந்திப்பு

Editorial   / 2018 நவம்பர் 01 , பி.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய சூறா கவுன்ஸில் தலைவர் தாரிக் மஹ்மூத் தலைமையில், அதன் முக்கியஸ்தர்கள், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும், இன்று (01) சந்தித்து, தற்போதைய அரசியல் நிலைபரம் குறித்தும், தேசிய நலனுடன் முஸ்லிம் சமூக நலன் குறித்தும் நீண்ட நேரம் கலந்துரையாடினர்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமின் இல்லத்தில் நடைபெற்ற இக்கருத்துப் பரிமாறலில், சூறா கவுன்ஸிலின் சார்பில் அதன் தலைவருடன், அதன் ஏனைய உறுப்பினர்களில் சிலரான ஜாவித் யூசுப், ரிஸா எஹியா, சட்டத்தரணி ரி.கே.அசூர், சியாத் இப்றாகிம் ஆகியோர் பங்குபற்றினர்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் கட்சியின் ஏனைய நாடாளுமன்ற  உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், எம்.ஐ.எம்.மன்சூர், அலிசாஹிர் மௌலானா, ஏ.எல்.எம்.நசீர் ஆகியோர் உட்பட அரசியல் சூழ்நிலையை மையப்படுத்தி அனுபவ ரிதியான கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

எவ்வாறாயினும், கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒற்றுமையாக இருந்து எந்தச் சந்தர்ப்பத்திலும் தங்கள் தலைமைத்துவத்துக்கு கட்டுப்பட்டு நடந்து கொள்வதாக, சூறா கவுன்ஸில் உறுப்பினர்களிடம் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .