2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

முகத்துவாரத்தில் 1200 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு

Editorial   / 2020 மே 05 , பி.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

முகத்துவாரம், மெத்சிறிபுர உயன குடியிருப்பு தொகுதியிலுள்ள 239 குடியிருப்புகளில் வசிக்கும் 1200க்கும் மேற்பட்டோர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மெத்சிறிபுர உயன குடியிருப்பில் வசித்து வரும் 62 வயதான பெண் ஒருவரே கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

குறித்த குடியிருப்பு கட்டடம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு நகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ருவன் விஜயமுனி குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், குறித்த பெண்ணுடன் வசித்து வந்த 6 பேரும், பெண்ணுடன் வைத்தியசாலைக்கு வருகை தந்த 4 பேரும் கண்காணிப்பு முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X