R.Maheshwary / 2021 ஜனவரி 03 , பி.ப. 05:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாளை (4) காலை 5 மணியிலிருந்து கொழும்பின் சில பகுதிகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படுவதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைய முகத்துவாரம் பொலிஸ் பிரிவு முடக்கத்திலிருந்து விடுவிக்கப்படவுள்ளதுடன், வாழைத் தோட்டம் பொலிஸ் பிரிவின் புதுக்கடை மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு புதுக்கடை கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு, பொரலை பொலிஸ் பிரிவின் வனாத்தமுல்ல கிராம உத்தியோகத்தர் பிரிவு, மிரிஹான பொலிஸ் பிரிவின் தெமலவத்த பிரிவும் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படவுள்ளன.
மேலும், கம்பஹா மாவட்டத்தின் பேலியகொட பொலிஸ் பிரிவின் பேலியகொட கிராம உத்தியோகத்தர் பிரிவு,மீகஹாவத்த கிராம உத்தியோகத்தர் பிரிவு, பட்டிய வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவின் ரோஹண விஹார வீதி, பேலியாகொட கஹபட கிராம உத்தியோகத்தர் பிரிவின் நெல்லிகஹவத்த மற்றும் பூரண கொட்டுவத்த ஆகிய பிரதேசங்கள் விடுவிக்கப்படவுள்ளன.
அத்துடன், கிரிபத்கொட பொலிஸ் பிரிவின்விலேகொட வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவின் ஸ்ரீ ஜயந்தி மாவத்தையும் தனிமைப்படுத்தலிலிருந்து நாளை விடுவிக்கப்படவுள்ளன.
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago