2025 ஜூலை 07, திங்கட்கிழமை

முதலாம் திகதியிலிருந்து தடை

Editorial   / 2019 ஜனவரி 30 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீகிரிய குன்று அமைந்துள்ள பகுதிக்கு பொலித்தீன் சார்ந்த உற்பத்திப் பொருட்கள் கொண்டு செல்வது பெப்ரவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து தடை செய்யப்படவுள்ளது.

குறித்த வலயமானது முதலாம் திகதியிலிருந்து பொலித்தீன் உள்ளிட்ட கழிவுகளற்ற வலயமாக பிரகடனப்படுத்தப்படுவதற்கு மத்திய கலாசார நிதியம் தீர்மானித்துள்ளது.

வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாஸவின் அறிவுரைக்கமைய இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக நிதியம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய எதிர்வரும் முதலாம் திகதியிலிருந்து குறித்தப் பிரதேசத்துக்கு கொண்டு செல்லப்படும் உணவு வகைகள் உள்ளிட்டவைகளை பொலித்தீன் பைகளால் கொண்டு செல்வதற்கு உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .