Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 ஒக்டோபர் 07 , பி.ப. 06:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ், எஸ்.கணேசன்
இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள முத்துவிநாயகம் தொண்டமானுக்கு, பிணை வழங்கப்படக்கூடாது என்று கோரியுள்ள மலைநாட்டு புதிய கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம், இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அமைச்சர் விஜயமுனி சொய்சாவின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தேசியக் கால்நடைவள அபிவிருத்தி சபைக்குரிய மெல்சிறிபுர விவசாயப் பண்ணையில் உள்ள விடுதியை, 2 வருடங்களுக்கு வாடகைக்கு வழங்குவற்காக, வர்த்தகர் ஒருவரிடம்மிருந்து 6 இலட்சம் ரூபாயை இலஞ்சமாக பெற முயற்சித்தக் குற்றச்சாட்டில் முத்துவிநாயகம் தொண்டாமன் கைதுசெய்யப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், இவ்வாறானச் செயற்பாடுகளால், இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் உயிருடன் இருந்திருந்தால், இவ்வாறான விடயங்களைக் கேளவியுற்று “நெஞ்சு வெடித்து செத்திருப்பார்” என்றும் அவர் இதன்போது தெரிவித்தார்.
நுவரெலியா கந்தப்பளை கோட்லோஜ் தோட்டம், நோனா தோட்டம் ஆகியத் தோட்டங்களில், புதிதாக நிர்மாணிக்கப்பட்ட “பாக்கிய புரம்” “ஜி.ஆர்.மோத்தா புரம்” ஆகிய தனிவீட்டுத் திட்டங்களைப் பயனாளிகளுக்குக் கையளிக்கும் நிகழ்வு, இன்று நடைபெற்றது.
இந்நிகழ்விவுகளில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறுத் தெரிவித்தார். இங்குத் தொடர்ந்துரையாற்றிய அவர் மேலும் கூறுகையில், தேசிய பால் சபையான என்.எல்.டி.பி.நிறுவனத்தில், இலஞ்சம் ஊழல் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட முத்துவிநாயகம் தொண்டமானை, பிணையில் விடுவிக்காது, தக்கத் தண்டனை வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
குறித்த நபர், பால் பண்ணை ஒன்றில், மரங்களைத் தரித்து விற்பனைச் செய்தக் குற்றத்துக்காக, ஏற்கெனவே பணிநீக்கம் செய்யப்பட்டவர் என்று நினைவூட்டிய அமைச்சர், எனவே தொடர்ந்தும் ஊழல் நடவடிக்கையில் ஈடுப்பட்டு வரும் குறித்த நபருக்கு நீதிமன்ற பிணையோ அல்லது பொலிஸ் பிணையோ வழங்கப்படகூடாது என்றும் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்துரையாற்றிய அமைச்சர், பெருந்தோட்டப் பகுதிகளுக்கு ஒரு இலட்சத்து அறுபதாயிரம் வீடைகள் தேவைப்படுவதாகச் சுட்டிக்காட்டிய அவர், பெருந்தோட்ட மக்களின் வீடமைப்புத் தேவைகளை ஐந்து வருடத்தில் தீர்த்து வைக்க முடியாது என்றும், கட்டம் கட்டமாகவே வீடுகளை அமைத்துக் கொடுக்க முடியும் என்றும் தெரிவித்தார்.
கோட்லோஜ் தோட்டத்தில் நூறு வீடுகளை அமைத்து, அவ்வீட்டுத் திட்டத்துக்கு கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணனின் பெயரை சூட்டுவதற்கும் ஆசையாகவுள்ளதாகத் தெரிவித்த அவர், சிலர் பொய்யான வார்த்தைகளை மக்கள் மத்தியில் பரப்பிகொண்டு ஊழல் களில் ஈடுபட்டுக்கொண்டு அரசியல் செய்துவருகின்றனர் இவர்களின் பின் மக்கள் செல்லக்கூடாது என வேண்டுகோள் விடுத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
19 minute ago
55 minute ago