Editorial / 2026 ஏப்ரல் 20 , பி.ப. 01:49 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர் பியசேன கமகே, இன்று (20) கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகமவினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை தலா 2 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்ட நீதவான், அவர் நாட்டை விட்டு வெளியேறுவதற்குத் தடையும் விதித்து உத்தரவிட்டார்.
திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில், தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி ஊழல் புரிந்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, முகாமைத்துவ சேவைத் திணைக்களத்தின் அங்கீகரிக்கப்பட்ட ஆட்சேர்ப்பு நடைமுறைகளை மீறி, காலி மாவட்டத்தைச் சேர்ந்த 134 பேரைத் தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களத்தில் சிற்றூழியர்களாகப் பணியமர்த்தியமை தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டதாகப் புலனாய்வு அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026