2025 ஜூலை 10, வியாழக்கிழமை

முன்னாள் அமைச்சர் ராஜிதவுக்கு எதிராக மகஜர்

Editorial   / 2018 நவம்பர் 08 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உறுப்பினர்கள் 14,000 பேரின் கையொப்பத்துடனான மகஜர் ஒன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை ஜனாதிபதியின் செயலாளரிடம் இந்த மகஜர் கையளிக்கப்பட்டதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

ராஜித சேனாரத்ன சுகாதார அமைச்சராக பதவி வகித்தப் போது, பல்வேறு ஊழல், மோசடிகளில் ஈடுபட்டதாகவும், இது தொடர்பில் விசாரணையொன்றை முன்னெடுக்குமாறு ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ள மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் ​பேச்சாளர் சமந்த ஆனந்த தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .