2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

முன்னாள் இராணுவ வீரருக்கு மரண தண்டனை

Editorial   / 2017 ஜூலை 03 , பி.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரண்டு பிள்ளைகளின் தாயான தன்னுடைய மனைவியை, 13 வருடங்களுக்கு முன்னர் கழுத்தை நெரித்து, மிகவும் இரகசியமான முறையில் படுகொலைசெய்தார் என்ற குற்றஞ்சாட்டப்பட்டிருந்த முன்னாள் இராணுவ வீரரொவரை குற்றவாளியாக இனங்கண்ட நீதிபதி, அவருக்கு மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

பொலன்னறுவை மேல் நீதிமன்ற நீதிபதி எச்.ஏ. நிமல் ரணவீரவே, மேற்படி முன்னாள் இராணுவ வீரருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

தும்மலசூரிய, வீரகொடியான எனுமிடத்தை வசிப்பிடமாகக் கொண்ட ரோஹன சுனில் குமார என்பருக்கே இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பொலன்னறுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஏக்கேஎல பிரதேசத்தில், 2004 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14ஆம் மற்றும் 15ஆம் திகதிகளில் அல்லது அதனை அண்மித்த தினமொன்றில், 24 வயதான ருவந்தி தக்சலா என்பவரை கைக்குட்டையால், கழுத்தை நெரித்து படுகொலை செய்ததாகவே, முன்னாள் இராணுவ வீரருக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

தன்னுடைய மனைவியான ருவந்தி தக்சலா என்பவரை, பொலன்னறுவை விகாரைக்கு பாதயாத்திரை அழைத்துச் செல்வதாகக் கூறியே, காட்டுக்குள் அழைத்துசென்று, இவ்வாறு இரகசியமான முறையில் படுகொலை செய்துள்ளார் என்று அறியமுடிகின்றது.

பிரதிவாதிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த சகல குற்றச்சாட்டுகளும், எவ்விதமான சந்தேகமும் இன்றி, நிரூபிக்கப்பட்டமையால், சந்தேகநபரை குற்றவாளியாக இனங்கண்ட நீதிபதி அவருக்கு மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .