2025 ஜூலை 17, வியாழக்கிழமை

முன்னாள் ஜனாதிபதியின் மனைவிக்கு புதிய வீடு

Kamal   / 2018 ஒக்டோபர் 01 , பி.ப. 01:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மனைவி ஹேமா பிரேமதாசவுக்கு கொழும்பு 7 இல் புதிய வீடொன்றை பெற்றுகொடுக்க அரசாங்கம் அவதானம் செலுத்தி வருகிறது.

கொழும்பு 7 ஹெக்டர் கொப்பேகடுவ மாவத்தையில், அமைந்துள்ள வீடொன்றை புனரமைத்து கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வீட்டின் புனரமைப்பு பணிகள் கடற்படையினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 6 மில்லியன் ரூபாய் செலவில் குறித்த இல்லத்தை புனரமைக்கவுள்ளதாகவும், அடுத்த வருடத்தில்  மேலதிக புனரமைப்புச் செயற்பாடுகளுக்காக 28 மில்லியன் ரூபாய் செலவிடப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி செயலகம், திறைசேரி என்பன மேற்படி வீட்டை புனரமைப்பதற்கான நிதியை வழங்கவுள்ளதாகவும் அறிய முடிகிறது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X