Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Editorial / 2020 ஜனவரி 27 , பி.ப. 03:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகே உள்ளிட்ட நால்வருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமான முறையில் யானைக்குட்டியொன்றினை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் முன்னாள் கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகே உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் விசாரணையை ஜனவரி 29ஆம் திகதிவரை நிறுத்திவைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (27) உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் கொழும்பு மேலதிக நீதவான் திலின கமகே சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையின் போது இந்த உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது.
தனக்கு எதிராக மேல்நீதிமன்றில் நடைபெறும் வழக்கினை நீதிபதி கிஹான் குலதுங்கவிடம் இருந்து மற்றுமொரு நீதிபதிக்கு மாற்றுமாறு குறித்த மனுவில் திலின கமகே கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில், குறித்த மனு 29ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
2 hours ago