2025 ஓகஸ்ட் 06, புதன்கிழமை

முன்னாள் மனைவியை கற்பழித்த எய்ட்ஸ் நோயாளி

Editorial   / 2022 பெப்ரவரி 18 , பி.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனக்கும் எய்ட்ஸ் உள்ளதா என்று அறிய இளம்பெண் தன்னை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி உள்ளார். அந்த பெண் தற்போது மன அழுத்தத்தில் இருக்கின்றார்.

பெங்களூருவை சேர்ந்தவர் 28 வயது இளம்பெண். இவருக்கும் வாடகை கார் டிரைவர் ஒருவருக்கும் திருமணம் நடந்து இருந்தது. இந்த நிலையில் அந்த வாடகை கார் டிரைவர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். ஆனால் இதுகுறித்து அவர் இளம்பெண்ணிடம் கூறவில்லை. ஆனாலும் வாடகை கார் டிரைவருக்கு எய்ட்ஸ் இருப்பதை இளம்பெண் கண்டுபிடித்தார்.

இதுகுறித்து கேட்ட போது தனது முதல் மனைவியிடம் இருந்து தனக்கும் எய்ட்ஸ் வந்ததாக டிரைவர் கூறி இருந்தார். ஆனாலும் குடும்ப சூழ்நிலையால் இளம்பெண், டிரைவருடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் அந்த டிரைவர் பல பெண்களை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி பணம் மோசடி செய்தது வந்தது பற்றி இளம்பெண்ணுக்கு தெரியவந்தது. இதனால் அந்த இளம்பெண் தனது கணவரை பிரிந்து தாய் வீட்டிற்கே சென்று விட்டார். மேலும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு 2 பேரும் விவாகரத்தும் பெற்று இருந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இளம்பெண்ணை சந்தித்து பேசிய டிரைவர், இனி மேல் எந்த தவறும் செய்ய மாட்டேன் என்றும், தன்னுடன் வாழ வரும்படியும் கூறி உள்ளார். ஆனால் அதற்கு இளம்பெண் மறுத்து உள்ளார். இதனால் குளிர்பானத்தில் போதைப்பொருட்களை கலந்து கொடுத்து இளம்பெண்ணை, டிரைவர் கற்பழித்ததாக தெரிகிறது.

இதுகுறித்து அறிந்த இளம்பெண் டிரைவர் மீது பனசங்கரி பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் தனக்கும் எய்ட்ஸ் உள்ளதா என்று அறிய இளம்பெண் தன்னை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி உள்ளார். அந்த பெண் தற்போது மன அழுத்தத்தில் இருப்பதால் அவருக்கு வனிதா சகாய வாணி அமைப்பினர் ஆலோசனை வழங்கி வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X