Editorial / 2019 செப்டெம்பர் 08 , மு.ப. 10:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர் சஜீத் பிரேமதாச ஆகியோருக்கு இடையில் இன்று (08) இடம்பெறவிருந்த தீர்மானமிக்க பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த பேச்சுவார்த்தை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இடம்பெறும் என, அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து கூறுகையில், “சஜித் பிரேமதாசவின் பணிச்சுமை காரணமாகவே இந்த பேச்சுவார்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்றுவரை எங்களிடம் உள்ள கணக்கெடுப்புகளின் அறிக்கைகளை நாங்கள் அன்று முன்வைப்போம். நாங்கள் முன்வைத்த காலை பின்வைக்க போவதில்லை.
குட்ட குட்ட குனிபவனும் முட்டாள் குனியகுனிய குட்டுபவனும் முட்டாள் என்று கூறுவார்கள் இல்லையா.. நாங்கள் அந்த இடத்தில் இருக்கின்றோம். நிச்சமாக எம்மிடம் இரண்டாவது நடவடிக்கையொன்று உள்ளது.” என்றார்.
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago